உசிலம்பட்டி அருகே 10வருடத்திற்கு பிறகு நிரம்பிய கண்மாய் தண்ணீர் அதிகாரிகளின் அலட்சியத்தில் வீணானது.கிராம இளைஞர்களின் முயற்ச்சியால் அடைப்பு சரிசெய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜோதில்நாயக்கணூர் ஊராட்சிட்குட்பட்டது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 120ஏக்கர் பரப்பளவுகொண்ட மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கடந்த 10வருடங்களாகவே வறண்டு காணப்பட்ட நிலையில் கடந்த வருடம் குடிமராமத்து திட்டத்தின் மூலம் கண்மாயில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி தூர்வாரப்பட்டன. இந்த கண்மாயால் மீனாட்சிபுரம் உள்ளிட்ட 4 கிராம பகுதியில் உள்ள 500ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பயனடையும். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் கடந்த 10 நாட்களாக பெய்த பலத்த மழையால் கண்மாய் நிரம்பியுள்ளது.ஆனால் தற்போது மழைபெய்து கண்மாயில் நீர் நிரம்பிய நிலையில் கண்மாயிலிருந்த மதகுப் பகுதி சீரமைக்கப்படாததால் உடைபபின் காரணமாக அதன் வழியாக தண்ணீர் அனைத்தும் வெளியேறி வீணாகிச் சென்றன. இது குறித்து கிராம மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் முழு கண்மாய் நீர் முக்கால் கண்மாய் நீர் ஆன நிலையில் மீனாட்சிபுரம் பகுதி கிராம இளைஞர்கள் உசிலம்பட்டிப்பகுதியில் கண்மாய் சீரமைப்பில் ஈடுபட்டு வரும் உசிலம்பட்டி 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சௌந்திரபாண்டியன் தலைமையிலான இளைஞர்கள், ராஜக்காபட்டி சமூக ஆர்வலர் பால்ராஜ், மற்றும் மீனாட்சிபுரம் கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து கண்மாய் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மதகு பகுதியில் மணல் மூட்டைகளை வைத்து தண்ணீர் வெளியே செல்லும் பகுதிகளை அடைத்தனர். அதனைதொடர்ந்து தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் தானே களத்திலிறங்கி கண்மாய் அடைப்பை சரி செய்த இளைஞர்களின்; முயற்சியை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உசிலைசிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..