Home செய்திகள் வகுரணி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஏழு ஊர் மக்கள் இணந்து கொண்டாடிய மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

வகுரணி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஏழு ஊர் மக்கள் இணந்து கொண்டாடிய மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் கிராமம் செழிக்க மாசி மகாசிவராத்திரியன்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடமும் மகாசிவராத்திரியன்று வகுரணி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் வகுரணி பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தைப்பட்டி, கணவாய்பட்டி, அயோத்திபட்டி, வகுரணி ,நாவார்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, முத்தையன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்றினைந்து விரத மிருந்து மஞ்சள் நீரை பாணையில் எடுத்து ஊரவலமாக கோவிலுக்கு கொண்டு வந்து கோவிலை மூன்று முறை சுற்றி அங்குள்ள தொட்டியில் ஊற்றுவர். பாணையில் கொண்டு வந்த மஞ்சள் நீரை பாதி தொட்டியிலும், பாதி மஞ்சள் நீரை வீட்டிற்கு எடுத்து செல்வார்கள். இது போன்று வழிபட்டால் கிராமம் செழிக்கும் என்பது ஐதீகமாக அந்தபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com