Home செய்திகள் கோவிலாங்குளம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவிலாங்குளம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உசிலைசிந்தனியா.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!