Home செய்திகள் கண்மாயை சீரமைத்து அதன் வரவு,செலவு கணக்கு விபரங்களை ப்ளக்ஸ் பேனர் மூலம் பொதுமக்களுக்கு வெளிக்காட்டிய இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

கண்மாயை சீரமைத்து அதன் வரவு,செலவு கணக்கு விபரங்களை ப்ளக்ஸ் பேனர் மூலம் பொதுமக்களுக்கு வெளிக்காட்டிய இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

by mohan

பொதுவாக கண்மாய் தூர்வாருதல் ஏரியை ஆழப்படுத்துதல் போன்ற பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்கள் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களிடம் நன்கொடை வசூல் செய்து வேலை செய்வர்.வேலை செய்வதோடு சரி.முக்கிய பிரமுகர்களிடம் வசூல் செய்த பணத்திற்கு அவர்களிடம் கணக்கை காட்டி வேலையை முடித்துக் கொள்வர்.பொதுமக்களிடம்ஏதும்தெரிவிப்பதில்லை.ஆனால் உசிலம்பட்;டியில் நன்கொடை வாங்கி கண்மாயை அதன் வரவு செலவு விபரங்களையும் பொதுமக்கள் பார்வையில் படும்படி ப்ளக்ஸ் பேனர் வைத்து அசத்தியுள்ளனர் இளைஞர்கள் குழுவினர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி மொத்தம் 24 வார்டுகளை கொண்டுள்ளது. இந்த 24 வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடுக்கு உள்ளநிலையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மக்களுக்கு வாரம் ஒருமுறை 1மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடைகாலம் துவங்குவதற்கு முன்னரே உசிலம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனை கருத்தில் கொண்ட தன்னர்வ இளைஞர்கள் உசிலம்பட்டி கண்மாயை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட ஆலோசித்தனர். உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு சுமார் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் முற்றிலும் சீமைக்கருவேல மரங்களும், குப்பைகளும் நிறைந்து காணப்பட்டன. இந்த கண்மாயை சீரமைத்தால் உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை சரிசெய்யலாம் என கருதி அதற்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். உசிலம்பட்டி 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழு தலைவர் சௌந்திரபாண்டியன் தலைமையிலான தன்னார்வ இளைஞர்கள் கண்மாயை சீரமைக்க மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கி அனுமதி கடிதத்தை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரின் முன்னிலையில் சமர்பித்து அவர் அனுமதியுடன் கண்மாய் சீரமைக்கும் பணிகளை ஆரம்பித்தனர்.

அதனைதொடர்ந்து கண்மாயினை இரவும், பகலும் என பாராமல் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி; கரையை வலுப்படுத்தி கண்மாயை ஆழப்படுத்தினர். இதற்காக 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சார்பில் இளைஞர்கள் தங்கள் சொந்த சொந்த நிதியையும், உசிலம்பட்டி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், வணிக நிறுவனர்கள் என பலரிடம் இளைஞர்கள் நிதி திரட்டி அதன் மூலம் கண்மாயினை தூர்வரியுள்ளனர். சுமார் 55ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கண்மாயினை கடந்த ஒரு மாதத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து சீரமைத்துள்ளனர்.இந்நிலையில் கடந்தமாதம் 16ம் தேதி ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, ஆசியாவின் இரண்டாவது தொட்டிப்பாலம் வழியாகவும், உத்தப்பநாயக்கணூர் கால்வாய் வழியாகவும் உசிலம்பட்டி கண்மாய்க்கு வைகை தண்ணீர் வந்தடைந்தது. தற்போது வைகை தண்ணீர் தூர்வாரியுள்ள உசிலம்பட்டி கண்மாயில் முக்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. எத்தனையோ பருமழை பெய்தாலும் இந்த கண்மாயில் தண்ணீர் தேங்குவதில்லை என ஏக்கத்துடன் காத்திருந்த உசிலம்பட்டி மக்களுக்கு 30 வருடங்களுக்குப்பின் வைகை தண்ணீர் தேங்கியுள்ளது ஒரு வரபிரதாசமாக எடுத்து கொண்டனர். தற்போது உசிலம்பட்டி கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கோடை கால்த்தில் குடிநீர் தட்டுபாட்டை போக்கலாம் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அதனைதொடர்ந்து கண்மாய் சீரமைக்க உதவிய நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து சால்வை அணிவித்து கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்இரவும் பகலும் பாராமல் உழைத்த ஜேசிபி ஓட்டுநர்,நன்கொடையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சௌந்திரபாண்டியன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.எப்போதும் நன்கொடை வசூலிப்பவர்கள ரச{து வழங்கி நன்கொடை வசூலிப்பார்கள். ஆனால்அதன் வரவு செலவு அவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. ஆனால் உசிலம்பட்டி கண்மாய் தூர்வார வரவு பணம் எவ்வளவு, செலவு செய்த பணம் எவ்வளவு, நன்கொடை வழங்கியவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் வழங்கினார்கள் ஒரு பைசா பாக்கியில்லாமல் அவற்றை தொகுத்து ப்ளக்ஸ் பேனர்கள் அடித்து பொதுமக்களின் பார்வைக்காக வெளிக்காட்டிய இளைஞர்களின் செயல் காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த ப்ளக்ஸ் பேனர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்து. இதனை பார்த்த நன்கொடையானர்களும், பொதுமக்களும் தங்கள் பணம் வீணடிக்கப்படவில்லை என இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இளைஞர் கூட்டம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஒரு மாதத்தில் கண்மாய் சீரமைத்து காட்டியது மட்டுமல்லாமல் தாங்கள் பணவிஷயத்திலும் நேர்மையானவர்கள் என்பதை மற்றவர்களுக்கு முன்னோடியாக ப்ளக்ஸ் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர் உசிலம்பட்டி இளைஞர்கள்.

உசிலைசிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com