உசிலம்பட்டி அருகே 58 கிராம கால்வாயில் வரும் வைகை தண்ணீரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மலர்தூவி வரவேற்றார்.

கடந்த 16ம் தேதி ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து 58கிராம கால்வாய் வழியாக 150அடி கனவீதம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார். திறந்து விடப்பட்ட வைகை தண்ணீர் உசிலம்பட்டி பகுதி விவசாய பாசனத்திற்காக கால்வாய் வழியாக வந்து கொண்டிருக்கிறது.வைகை அணையிலிருந்து சுமார் 23 கிலோ மீட்டரை கடந்து ஆசியாவின் 2வது தொட்டிப்பாலத்தை நேற்று இரவு வந்தடைந்தது, அதன்பின் அங்கிருந்து தொட்டிப்பாலம் வழியாக 13கிலோ மீட்டரை கடந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் கிராமத்தில் உள்ள 58 கிராம கால்வாய் வழியாக உசிலம்பட்டி கண்மாய்க்கு வைகை தண்ணீர் வருகிறது. இந்நிலையில் உத்தப்பநாயக்கணூரில் உள்ள கால்வாயில் வரும் தண்ணீரை உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி மகிழ்ச்சியுடன் மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். இதில் செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா, அதிமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பண்பாளன், செல்லம்பட்டி இளைஞரணி செயலாளர் ரகு, உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா,   மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், 58கிராம கால்வாய் விவசாய சங்கத்தினர், அதிமுக நிர்வாகிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா