அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளரும், புறநகர் மாவட்ட செயலாளருமான இ.மகேந்திரன் தலைமையில், உசிலம்பட்டி நகர செயலாளர் குனசேகரபாண்டியன் முன்னிலையில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது. மேலும் உசிலம்பட்டி பேருந்து நிலையம்அருகில் கழக அமைப்பு செயலாளாள் இ.மகேந்திரன் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன், தெற்கு ஒன்றிய செயலாளர் மலேசியாபாண்டி, மற்றும் கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா