
மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு இன்று அளிக்கப்பட்டது..வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை காத்திட ஆகஸ்ட் மாதம் ட்ரோன் மூலம் உயிர்க்கொல்லி மருந்தை 3 முறை சோதனை ஓட்டத்தை உயர் திரு வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உதவியால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது..அதனை மதுரை மாவட்ட முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிட வேண்டும்..58 கிராம கால்வாய் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி நிரந்தர அரசாணை வழங்கிட முதலமைச்சர் மற்றும் வருவாய் பேரிடர் அமைச்சரிடம் பரிந்துரை செய்திட வேண்டும்..58 கிராம கால்வாய் மராமத்து பணிகளை விரைந்து முடிக்க மற்றும் மேற்பார்வவை செய்திட குழு அமைத்திட வேண்டும்..விவசாய குறைதீர்ப்பு முகாம் தாலுகா அளவில் நடத்திட வேண்டும்..மாவட்ட அளவில் நடைபெறும் விவசாய குறைதீர்ப்பு முகாம் நேரிடையாக நடத்தப்பட வேண்டும் அல்லது தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்பட வேண்டும்..உசிலம்பட்டியில் உள்ள வரத்து கால்வாய்களை மற்றும் கண்மாய்களை தூர்வாரி மலைகளில் இருந்து வரும் மழை நீரை சேமித்தட வேண்டும்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..என்பது உள்பட கோாிக்கைகளை வைத்துள்ளனா்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.