மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி.விவசாயக் கூலி.ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்;றார்..இவருக்கும் கௌசல்யா என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே 4 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கௌசல்யா கர்ப்பமாகி கடந்த 21ஆம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த குழந்தை உடல்நல குறைவு காரணமாக 26.12.2021 அன்று இரவில் உயிரிழந்தாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.வாவாரம் குழந்தையை பரிசோதிக்க சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து செவிலியர் தேவி வந்து தடுப்பூசி போடுவதற்காக குழந்தையைக் கேட்ட போது அது உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாகவும் அதனால் புதைத்து விட்டதாகவும் பக்கத்து வீட்டில் கூறியுள்ளனர்.முத்துப்பாண்டி வீடு பூட்டியிருந்தது.இதில் சந்தேகமடைந்த செவிலியர் தேவி கிராம நிhவாக அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தகலறிந்த சேடபட்டி கிராம நிர்வாக அலுவலர் முணியாண்டி பிறந்த ஐந்து தினங்களிலேயே பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சேடபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் சேடபட்டி காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து பெண் சிசு கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., மேலும் முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீட்டில் யாருமில்லாமல் வீடு பூட்டப்பட்டிருந்தது.; தலைமறைவான பெற்றோர்களை போலிசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில் குழுந்தையை புதைத்தாக கூறப்படும் இடத்தில் பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் காவல் ஆய்வாளர் காந்தி தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் மதுரை அரசு மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவகுழுவினர் பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.