Home செய்திகள் உசிலம்பட்டி அருகே ஆங்கிலத்தில் சார், மேடம், வேண்டாம் தமிழில் அய்யா. அம்மா ஒரு மனதாக நிறைவேற்றிய கிராம சபை கூட்டம்.

உசிலம்பட்டி அருகே ஆங்கிலத்தில் சார், மேடம், வேண்டாம் தமிழில் அய்யா. அம்மா ஒரு மனதாக நிறைவேற்றிய கிராம சபை கூட்டம்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி பொதுமக்களின் குறைகள் தீர்க்கும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்இதில் பொதுமக்கள் கூறுகையில் ராஜக்காபட்டி ஊராட்சியில் அரசு அதிகாரிகள் தலைமை பணியாளர்கள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஆகியோர் ஆங்கிலத்தில் சார், மேடம், என்று அழைக்கப்படும் ஆங்கிலச் சொல்லே உபயோகிக்காமல் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மொழியான தமிழ்மொழியின் அய்ய. அம்மா என்ற தமிழ்சொல் உபயோகப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் பொதுமக்கள் ராஜக்காபட்டி மேற்கு காலனி பகுதியில் முதல் மேற்கு வளர்ச்சி பெற்று வரும் பஸ் ஸ்டாப் வரை உள்ள பகுதிகளுக்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட வேண்டும் 58 கிராம கால்வாய் திட்டத்தின் மூலம் பாசனம் பெறும் பகுதியாக அல்லிகுண்டம் மற்றும் ஜோதி நாயக்கனூர் ஆகிய கண்மாய்கள் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் மேலும் ராஜக்காபட்டி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு அதிகாரிகளிடம் இனிமேல் சார் மேடம் என்று ஆங்கிலச்சொல் உபயோகிக்காமல் ஐயா அம்மா என்ற தமிழ்சொல் உபயோகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com