Home செய்திகள் பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

by mohan

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிலுள்ள மயிலாடு;ம்பாறையிலிருந்து மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள மள்ளப்புரம் வரை மலைப்பகுதியில் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை பஸ் வசதி செய்து தரப்படவில்லை. எம்.கல்லுப்பட்டியிலிருந்து மள்ளப்புரம் வழியாக மயிலாடும்பாறைக்கு பேருந்து வசதி ஏற்ப்படுத்தப்பட்டால் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட கிராமங்களும் கிராம மக்களும் பயன் பெறுவார்கள்.இது குறித்து இப்பகுதி மக்கள் சுமார் 30 ஆண்டுகளாக பேருந்து வசதி கேட்டு அரசிடம் பலமுறை மனுக் கொடுத்தும் பதில் இல்லை.

இந்நிலையில் எம்.கல்லுப்பட்டியிலிருந்து மயிலாடும்பாறைக்கு அரசு பேருந்து வசதி ஏற்ப்படுத்தக் கோரி எம்.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் கிராம மக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டங்களாக சாலை மறியல் மற்றும் 50 கிராமங்கள் பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.

உசிலை மோகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com