Home செய்திகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் மக்கள் தொகை தின பேச்சு போட்டி; பரிசுகள் சான்றிதழ் வழங்கல்..

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் மக்கள் தொகை தின பேச்சு போட்டி; பரிசுகள் சான்றிதழ் வழங்கல்..

by ஆசிரியர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக கல்லூரியில் உலக மக்கள் தொகை தினவிழாவை முன்னிட்டு மக்கள் தொகை பெருக்கமும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரி நலப்பணித் திட்டம் மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினவிழா கல்லூரி முதல்வர் கருப்பசாமி தலைமையில் 

நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது. மாவட்ட குடும்ப நலத்துறை விரிவாக்க கல்வியாளர் ஜெயசித்ரா, சேர்ந்தமரம் வட்டார மருத்தவ அலுவலர் புரோஸ்கரன், மருத்துவம் சாரா மேற்பர்வையாளர் முருகன், வட்டார சுகாதார புள்ளியலாளர் கோட்டைச்சாமி, சுகாதர ஆய்வாளர் சுப்பையா மற்றும் சுகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

மக்கள் தொகை பெருக்கமும் அதன் விளைவுகளும் என்று தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்த கொண்டனர். போட்டியில் வணிகவியல் மாணவர் மாரிமுத்து முதல் பரிசையும், மாணவி கனகா 2 வது பரிசையும் வணிக மேலாண்மைவியல் துறை மாரிசெல்வி மூன்றாவது பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குமார் செல்வி நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!