தண்டவாளத்தில் கிடந்த பல லட்சம் ..

பரமக்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கிடந்த 37 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கிடந்த பாலீத்தின் பையை இன்று காலை கிடந்ததை அவ் வழியே சென்ற ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் சேவியர் மோசஸ் எடுத்து பிரித்து பார்த்தார். அதில் லட்சக்கணக்கான பணம் கட்டு, கட்டுக்களாக இருந்தது கண்டு அதிர்ந்தார்.

பணம் நிறைந்த அந்த பையை அரு கிலிருந்த டீக்கடை கந்தசாமியிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் ரயிலில் ராமநாதபுரம் சென்ற போது பணம் அடங்கிய பை தவறி கீழே விழுந்து விட்டதாக கூறி கந்தசாமியிடம் கேட்டுள்ளார் . இது குறித்து கண்டெடுத்து கொடுத்த சேவியர் மோசஸ் க்கு போன் மூலம் தகவல் சொல்லி வரச் சொல்லி பரமக்குடி நகர் போலீசில் பணத்தை ஒப்படைத்தனர்.

அதில்  ரூ.37 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்பணம் ஹவாலா பணமா என்பது குறித்து விசாரிக்க வருமான வரித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணத்திற்கு உரிமை கொண்டாடிய மகேந்திரன் பழைய நகைகளை வாங்கி விற்பவர் என்றும் மதுரையில் நகை விற்ற பணத்துடன் ரயிலில் ராமநாதபுரம் திரும்பிய போது பணத்தை| தவற விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..