Home செய்திகள் தென்காசியில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் குறைதீர் கூட்டம்..

தென்காசியில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் குறைதீர் கூட்டம்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் குறைதீர் கூட்டம் உதயம் பதிவு செய்தல் (UDYAM Certificate Registration) மற்றும் நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் 13.12.2023 அன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன், தென்காசி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தெரிவித்த குறைகளை கேட்டறிந்தும், நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தார். நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பு குறித்து மதுரை கேஎல்என் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மோகன்ராம், ரூபன்ராஜ் மற்றும் சுகவனேஷ் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

மேலும் தென்காசி நகர் மற்றும் ஊரமைப்புத்துறை மேற்பார்வையாளர் கட்டிட வரைபட ஒப்புதல் பெறும் வழிமுறைகள் பற்றியும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் திருநெல்வேலி கிளை மேலாளர், தொழில் நிறுவனங்களுக்கு நிதிவசதி குறித்த விபரங்களையும், தென்காசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் தொழிலக உரிமம் பெறுதல் குறித்த வழிமுறைகளையும், மாவட்ட வனத்துறை அலுவலர், திருநெல்வேலி உணவு பாதுகாப்பு துறை அலுவலர், திருநெல்வேலி, செயற்பொறியாளர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தென்காசி, ஆணையர், வருங்கால வைப்பு நிதி (EPFO) திருநெல்வேலி, ஆணையர், வணிக வரித் துறை, தென்காசி, மாவட்ட அலுவலர், தீயணைப்பு துறை தென்காசி, மேலாளர், தொழிலாளர் நலத் துறை மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (ESIC), தென்காசி ஆகிய துறைகள் கலந்து கொண்டு தொழில் துவங்க தேவையான அனுமதி மற்றும் சான்றிதழ்கள் பெறும் வழிமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தனர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தென்காசி கிளை மேலாளர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா தென்காசி கிளை மேலாளர், சங்கரன்கோவில், கடையநல்லூர் நகராட்சி ஆணையர்கள், தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே.எல். ஜெயபிரகாஷ், தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனச் சங்கத் தலைவர் செ.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிக்கான சம வாய்ப்பு கொள்கை, தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் தொழில் துறை நிறுவனங்கள் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com