தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளிக்காமல் நகைச்சுவையாக பேசிவிட்டு சென்றார்
*இந்தியா பாரத் என்ற பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு:*
பாகிஸ்தானை இந்தியா என்று மாற்றப் போகிறார்கள் தெரியுமா? எல்லா காமெடியும் செய்கிறார்கள் என்று நகைச்சுவையாக செய்தியாளர்களிடம் பதில் கூறி சென்றார்.
சென்னை சொல்ல மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது
சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி என உத்தர பிரதேசத்தில் சாமியார் அறிவித்த நிலையில் சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக காவல்துறை மற்றும் மத்திய தொழில் படை பாதுகாப்பு வீரர்கள் கூடுதல் பாதுகாப்பு வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.