Home செய்திகள் ஆரணி – தி.மு.க. பிரமுகா் பிரியாணிகடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்.

ஆரணி – தி.மு.க. பிரமுகா் பிரியாணிகடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்திமார்க்கெட்ரோடுபுதியபேருந்துநிலையம்,பழையபேருந்துநிலையம்      உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், பழக்கடைகள், தேநீர்விடுதி, பேக்கரிகள், உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், காலாவதியான உணவுப்பொருட்கள், பயன்பாட்டில் இருந்ததை ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமையிலான குழுவினர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர்.மேலும் தேநீர்விடுதி, பேக்கரி, உணவகங்களில், சூடான டீ, காபி, சாம்பார், மற்றும் பிரியாணி கடைகளில் பிளாஸ்டிக்பாக்ஸ், கேரிபேக்கில் குருமா ஆகியவற்றை பிளாஸ்டிக் கேரிபேக்கில் பார்சல் வாங்கி மக்கள் பயன்படுத்துவதால் கேன்சர் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.

இந்நிலையில் ஆரணி டவுன் பழைய பேருந்துநிலையம் மணிகூண்டு அருகே திமுக. பிரமுகர் அன்சர்பாஷா என்பவருக்கு சொந்தமான பைவ்ஸ்டார் பிரியாணி ஓட்டல் உள்ளது. இந்த பிரியாணி கடையில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குககள் பயன்பாட்டில் இருந்ததை பறிமுதல் செய்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் பறிமுதல் செய்து அங்கேயே கிழித்து அழித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று சுகாதார ஆய்வாளரை ஆய்வு செய்ய அதிகாரம் உனக்கு உள்ளதா எனவும், 40 ஆண்டு காலம் தொழில் செய்வதாகவும் மூன்று முறை நகராட்சி திமுக கவுன்சிலர் என்றும் எனக்கு சட்டம் தெரியும் எனவும், திடீர் ரெய்டுக்கு வருவதாக சொல்லிவிட்டுத்தான் வரனும். உன்னுடைய அதிகாரம் என்னவென்று எனக்குத் தெரியும் என மிரட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!