அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு இராமநாதபுரத்தில் உற்சாக வரவேற்பு..!

முன்னாள் ஜனாதிபதி எபிஜெ அப்துல்    கலாம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேக்கரும்பு  பகுதியில்  அமைந்திருக்கும் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக  துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழக செயலாளர் ஆனந்த் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு மாவட்ட எல்லையில் அளிக்கப்பட்டது.  தொடர்ந்து பரமக்குடி சத்திரக்குடி வழியாக இராமநாதபுரம் வந்தடைந்தார்.

இராமநாதபுரம் வருகை புரிந்த அவருக்கு  தொண்டர்கள் இராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் முத்தீஸ்வரன்  தலைமையில்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதில் கீழக்கரை நகர் கழக செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் இராமேஸ்வரம் சென்றடைந்தார். வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.