இராமநாதபுரத்தில் மரக் கன்று நடும் விழா..

இராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, இராமநாதபுரம் லயன்ஸ் கிளப், ஆரோக்யா மருத்துவமனை சார்பில் கேணிக்கரை சந்திப்பு- பேராவூர் வரை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். நகர் வர்த்தக சங்கத் தலைவர் பி.ஜெகதீசன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் எஸ்.ஹாரூண் முன்னிலை வகித்தனர்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம், யூத் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.வள்ளி விநாயகம், ஆரோக்யா மருத்துவமனை டாக்டர் ஆர்.பரணி குமார், மனநலம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு டாக்டர் பி.வித்யா பிரியதர்ஷினி, ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் சி.குணசேகரன், கிரீன் ரெட் கிராஸ் அமைப்பாளர் ஆ.மலைக்கண்ணன், பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.