திண்டுக்கல் காவலர் குடியிருப்பு அருகில் மரம் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு..

திண்டுக்கல் மாநகராட்சி ஏ.எம்.சி ரோடு காவலர் குடியிருப்பு அருகில் நேற்று மாலை மரம் சாய்ந்து அருகிலிருந்த மின் கம்பிகள் மீது விழுந்ததால் அப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளுக்கு இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பணிச்சுமையால் வாடும் காவலர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் சாய்ந்த மரத்தை காலை 11 மணி வரை அப்புறப்படுத்தவோ மின்சாரம் வழங்கவோ மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு பகலாக ஓய்வின்றி உழைக்கும் காவலர்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்