Home செய்திகள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம்: மீனவர்களுக்கு உள்வளாகப் பயிற்சி

ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம்: மீனவர்களுக்கு உள்வளாகப் பயிற்சி

by mohan

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை.,ஒரு அங்கமான மீன்வளத் தொழில் காப்பகம், தொழில்சார் பயிற்சி இயக்குனரகம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம் பற்றிய ஒரு வார கால உள்வளாகப் பயிற்சி துவக்க விழா மண்டபம் அருகே அரியமானில் இன்று நடந்தது. மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரக இயக்குநர் நீ. நீதிச்செல்வன், தலைமை தாங்கினார். அவர் பேசுதையில், மீனவர் ஓட்டுனர் உரிமம் பெற இப்பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும். ஆழ்கடல் மீன்வளத்தை சரியான முறையில் பாதுகாப்புடன் மீன்பிடிக்க இப்பயிற்சி உதவும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தேவையான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்ற செவுள் வலை வடிவமைத்தல் பயிற்சி நடத்தப்படுகிறது என்றார். உதவிப்பேராசிரியர் கலையரசன் வரவேற்றார். ராமேஸ்வரம் மீனவர் 20 பேர் பங்கேற்றுள்ளனர். ராமநாதபுரம் மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மா.வெ. பிரபாவதி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம், பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். ராமேஸ்வரம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வ.அப்துல் காதர் ஜெயிலானி பேசுகையில், மீனவர் வாழ்வாதாரம் உயரஆழ்கடல் மீன்பிடியை அதிகரிக்கலாம் என்றார். மீனவர்களின் தேவைக்கேற்ப இப் பயிற்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து பயிற்சியை திறம்பட நடத்தும் பயிற்சி ஏற்பாட்டாளார்களை பாராட்டினார்.தானியங்கி பொறியாளர் மா. சிவசுடலைமணி, நன்றி கூறினார். கேப்டன் சகாயரெக்ஸ் இயக்குனரக ஊழியர்களுடன் இணைந்து பயிற்சி ஏற்பாடு செய்தார். மாணவி சி.கிருத்திகா தொகுத்து வழங்கினார்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!