Home செய்திகள் ராணுவ வீரர்களை யோகா பயிற்றுநர்களாக மாற்றி காட்டிய ஈஷா!..15 நாள் ஹத யோகா பயிற்சி நிறைவு..

ராணுவ வீரர்களை யோகா பயிற்றுநர்களாக மாற்றி காட்டிய ஈஷா!..15 நாள் ஹத யோகா பயிற்சி நிறைவு..

by ஆசிரியர்

84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் பயிற்சியை (செப்.15) வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படைப் பிரிவும், ஈஷா யோக மையமும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு யோகா வகுப்புகள் கடந்த சுதந்திர தினத்தன்று (ஆக.15) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சென்னை, பெங்களூரு, செகந்தராபாத், மும்பை, புனே, அகமதாபாத், குவாலியர்,  ஜான்சி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் சுமார் 10,000 ராணுவ வீரர்களுக்கு ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள் இலவசமாக யோகா கற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், இதன் அடுத்தகட்டமாக, ராணுவ வீரர்களையே ஹத யோகா பயிற்றுநர்களாக மாற்றும் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் வகுப்பு கோவை ஈஷா யோக மையத்தில் செப்.1-ம் தேதி முதல் செப்.15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தரைப்படையின் தெற்கு பிராந்திய படைப் பிரிவில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் 84 ராணுவ வீரர்கள் மற்றும் விசாகப்பட்டினம், கொச்சின், டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய இடங்களில் பணியாற்றும் 20 கப்பற்படை வீரர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு சூர்ய க்ரியா, அங்கமர்த்தனா மற்றும் உப யோகா வகுப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும், அவர்கள் தங்கள் படைப் பிரிவுக்கு சென்று அங்குள்ள மற்ற வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

இவ்வகுப்பில் கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளை ராணுவ வீரர்கள் தினமும் செய்வதன் மூலம் தங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை சிறப்பாக கையாள முடியும்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!