Home செய்திகள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்..

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.13- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரியில் பயிற்சி நடந்தது. அறிவியல் இயக்க மாவட்ட துணை தலைவர் டி.நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். 

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம்.தியாகராஜன் துவக்கி வைத்தார்.  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைப்பாளர் உ.சதக் அப்துல்லா வரவேற்றார். கல்லூரி தாளாளர் தேவ மனோகர மார்ட்டின், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் கு.காந்தி, அழகப்பா அரசு கலை கல்லூரி இயற்பியல் துறை இணை பேராசிரியர் எம் கருணாகரன், சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏ.ஆனந்த், தமிழ்நாடு அறிவியல் இயக்க ராமநாதபுரம் வட்டார தலைவர் சி.குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கட்டுரை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் எம்.சசிகுமார, ராமநாதபுரம் அரசு கலை கல்லூரி கௌரவ விரிவுரையாளர்  எஸ்.பாலமுருகன், பட்டதாரி ஆசிரியர் எஸ்.கணேசன், பட்டதாரி ஆசிரியர் சி .ஜெரோம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் வெ. விஜயராம், ஹை. சாகுல் மீரா, இல்லம் தேடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜெ.லியோன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com