Home செய்திகள் புதுப்பாளையம் வட்டாரத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி..

புதுப்பாளையம் வட்டாரத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி..

by ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் வட்டாரத்தில் 2023-24 ஆம் ஆண்டு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் புதுப்பாளையம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலக மையத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ராமநாதன் தலைமை வகித்து பேசுகையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற 8 வகையான தொழில்நுட்பங்கள் கடைபிடித்தல் பற்றி தெரிவித்தார். வேளாண்மை துணை இயக்குநர்(நுண்ணீர் பாசனம்) அசோக்குமார் பேசுகையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்வதன் மூலம் தண்ணீர் சேமிக்க சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துல் பற்றி கூறினார்.வேளாண்மை துணை இயக்குநர் (மாநில அரசு திட்டம்) கண்ணகி பேசுகையில் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் மாநில திட்டங்களான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண் இடுப்பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார் வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) சௌந்தர் அவர்கள் பேசுகையில் கரும்பு சாகுபடியில் செலவுகளை குறைக்க ஒருபரு கருணை நடவு செய்தல் பற்றி கூறினார். மேலும் கரும்பு பயிரில் மாவுபூச்சி, குருத்துபூச்சி பூச்சிகளையும் மற்றும் செவ்வழுகல் நோய்களை கட்டுபடுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றி கூறினார். திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பன்னாரி அம்மன் சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்கள் வெற்றிவேந்தன், பிரமோத்குமார், கார்திக் மற்றும் பிரதீப் கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் அறுவடை குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தனர். நெட்டாபீம் இரிகேசன் நேரடி மேலாளர் லிங்கமூர்த்தி மற்றும் உழவியல் அலுவலர் சிவசங்கர் அவர்கள் கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக மகசூல் பெற வழிமுறைகள் குறித்து வீடியோ மூலம் விவசாயிகளுக்கு தெரிவித்தார். வேளாண்மை அலுவலர் வசந்த்குமார் பேசுகையில் கோடை உழவு, மண் பரிசோனை , நுண்ணீர் பாசனம் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் விஷ்ணு விவசாயிகள் மற்றும் அலுவலர்களை வரவேற்று அட்மா திட்ட செயல்படுகயையும்,வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார். இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பா.முத்து மற்றும் பயிர்அறுவடை பரிசோதகர்கள் ஜானகிராமன், உதயபாரதி மற்றும் தேவி விஜயலட்சுமி, அட்மா குழு தலைவர் கணபதி மற்றும் விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com