Home செய்திகள் நெல்லையில் “3D Printing Technology” என்னும் தலைப்பில் செய்முறை பயிலரங்கம்..

நெல்லையில் “3D Printing Technology” என்னும் தலைப்பில் செய்முறை பயிலரங்கம்..

by ஆசிரியர்

நெல்லையில் “3D Printing Technology” என்னும் தலைப்பில் செய்முறை பயிலரங்கம் நடைபெற உள்ளதாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேசிய பொறியாளர் தினத்தை (National Engineer’s Day) முன்னிட்டு வருகின்ற 15.09.2023 வெள்ளிக் கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையிலும் கல்லூரி (B.A, B.Sc, B.E, B.Ed and Diploma) பயிலும் மாணவ மாணவிகளுக்காக ‘3D Printing Technology’ என்னும் தலைப்பில் செய்முறை பயிலரங்கம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி இலவசம். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் வரும் 13.09.2023 புதன் கிழமைக்குள் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தின் கீழ் காணும் மின்னஞ்சல் [email protected] அல்லது 9442994797 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அலுவலக நேரங்களில் மட்டும் தொடர்பு கொண்டு (Name, College, Department & Contact number முதலிய விபரங்களுடன்) முன் பதிவு செய்வது அவசியமாகும். குறிப்பிட்ட இடங்களே இருப்பதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com