Home செய்திகள் அரசு பேருந்தில் பாஸ்ட் ட்ராக் இல்லாததால் 20 நிமிடங்களுக்கு நேரம் மேலாக நின்ற பேருந்து. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்

அரசு பேருந்தில் பாஸ்ட் ட்ராக் இல்லாததால் 20 நிமிடங்களுக்கு நேரம் மேலாக நின்ற பேருந்து. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்

by mohan

மதுரையில் இருந்து திருச்சி செல்லும் பாண்டு பாயிண்ட் (TN45N3811) திருச்சி மாவட்டம் கண்ட்ரோல்மென்ட் பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து ஆனது மதுரையில் இருந்து நேற்று இரவு 7 45க்கு புறப்பட்டது. இந்த பேருந்தானது மதுரையில் இருந்து கிளம்பி திருச்சியில் தான் நிற்கும் இடையில் நிற்காது. மேலும் இந்த பேருந்தில் நடத்துனர் கிடையாது .வாகனம் சென்று கொண்டு இருக்கும் பொழுது நடத்துனர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி விட்டு இடையில் இறங்கி விடுவார். அதன் பின் இரு கதவுகளும் அடைக்கப்பட்டு வாகனம் சென்று கொண்டிருந்தது .அப்பொழுது இரவு 9.45 மணி அளவில் விராலிமலை டோல்கேட் அருகே வரும் பொழுது அரசு பேருந்தில் பாஸ்ட் ட்ராக் பணம் இல்லாததால் பேருந்தை டோல்கேட் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்து விட்டார்கள். உடனடியாக ஓட்டுநர் பணிமனை மேலாளர் இடம் தொலைபேசி வாயிலாக பணம் இல்லை என சொல்லுகிறார். அப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது நேரம் ஆகிக் கொண்டிருக்கவே அப்பொழுது அங்கு இருந்த பயணிகள் எங்களுக்கு நேரமாய் விட்டது, 20 நிமிடத்திற்கு மேலாக ஏன் காத்துக் கொண்டிருக்கிறோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .சில பயணிகள் தங்களிடம் உள்ள பணத்தை கட்டி விட்டு வாகனத்தை எடுக்கச் சொல்லி ஓட்டுனர்களும் நிர்பந்தம் செய்தனர். எனினும் ஓட்டுநர் நான் கட்ட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் .இதனால் சுமார் அரை மணி நேரம் பேருந்து  அங்கே நிறுத்தப்பட்டது. இதனால் கோபம் அடைந்த பயணிகள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு டோல்கேட் ஊழியர்கள் பிரச்சனையை ஆவதை கண்டு வாகனத்தை எடுத்துச் சொல்லுங்கள் என அனுப்பி வைத்துவிட்டனர். பேருந்து எடுக்கும் முன் அதில் பாஸ்ட்ட்ராக் உள்ளதா எத்தனை டோல்கேட்டை கடக்கும் என அந்த பணிமனை மேலாளருக்கு தெரியாதா என பொதுமக்கள் கேள்விகளை எழுப்பினர். இதனால் விராலிமலை டோல்கேட்டில் சுமார் 20 நிமிடம் பரபரப்பாக காணப்பட்டது.  பணிமனை மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!