கீழக்கரை தெற்கு தவ்ஹீத் ஜமாத் சார்பாக டெங்கு நோய் ஒழிப்பு பிரச்சார பேரணி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 8.2.2017 அன்று டெங்கு நோய் ஒழிப்பு பிரச்சார பேரணி நடைபெற்றது.

இதில் மக்தப் மதரஸாவில் பயிலும் மாணவ மாணவிகள் தூய்மையை பற்றி இஸ்லாம் கூறும் குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழி அடங்கிய பதகைகளை ஏந்திய வண்ணம் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக வந்து டெங்கு நோய் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

மேலும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் ஒழிப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.