Home செய்திகள் கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முற்றுகை. 300 பெண்கள் உட்பட 800 பேர் கைது!

கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முற்றுகை. 300 பெண்கள் உட்பட 800 பேர் கைது!

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைய தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல அமைப்புகள் தொடர் முயற்சியினால் புதிய தாலுகா அலுவலகம் மெயின்ரோட்டில் வேளாண்மைதுறை கட்டிடடத்தில் 2/6/2015 செயல் பட்டது.

அன்று முதல் தாலுகா அலுவலகத்தை காட்டுப்பகுதிக்கு அமைத்திட தமிழக அரசு முயற்சி செய்தது. அப்போது 26/6/2015 அன்று மிகப்பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நடத்தி தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் புதிதாக அமையும் நிரந்தர வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்துக்கு 30 வருவாய் கிராம மக்கள் 3 பேரூராட்சி 2 நகராட்சி 25 கிராம ஊராட்சி மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல போதுமான பேருந்து வசதி, சாலைவசதி இல்லாத வனவிலங்குகள் நடமாடும் இடத்தில் சமூகவன காட்டை காட்டுப்புறம் போக்கு என திருத்தி கடந்த 13.12.2018 அன்று இரவு 7 மணிக்கு மாவட்ட நிர்வாகம் அடிக்கல்லை நாட்டியது.

இது ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் ரியல் எஸ்டேட் தொழிலை வளர்ப்பதற்கு திட்டமிட்டு அங்கே கொண்டுசெல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்தும் விதத்தில் பொதுமக்களின் நலன் கருதி தற்போது அடிக்கல் நாட்டியுள்ள இடத்தை இரத்து செய்ய வலியுறுத்தியும் நகரின் மையப் பகுதியான போக்குவரத்துக்கு வசதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள 7 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்திலோ, அல்லது கால்நடை மருத்துவமனைக்கு எதிரில் உள்ள வேளாண்மை துறை அக்ரோவிற்கு சொந்தமான 70 சென்ட் இடத்திலோ அல்லது தற்போது செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைகூடம் கட்டிடத்திலோ நிரந்தர புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட தமிழக அரசை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறைசெல்லும் போராட்டத்தை கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.

அதன்படி மணிக்கூண்டு அருகே காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டிய தாலுகா அலுவலக இடத்தை ஊர்வலமாக புறப்பட்டு முற்றுகையிட சென்ற போது புளியங்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் முற்றுகையிட சென்ற …300 பெண்கள் உட்பட..800 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் மாலையில் விடுதலை செய்தனர். இதில் மாநிலச்செயலாளர் நெல்லை முகம்மது பைசல் கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் ஜலாலுத்தீன் செயலாளர் சுலைமான் பொருளாளர் செய்யது மசூது மற்றும் கிளை நிர்வாகிகள் குறிச்சி சுலைமான், அப்துல்ஜப்பார், அப்துல்காதர், பாருக், அன்ஸாரி, குல்லிஅலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!