
கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். இந்த முகாமுக்கு கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைக்கிறார்.
அதே போல் 15 ஆகஸ்ட் அன்று கீழக்கரை தவ்ஹீத் ஜமாத், தெற்கு கிளை மாணவர் அணி சார்பாக சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இலவச கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடைபெற உள்ளது.
You must be logged in to post a comment.