கீழக்கரையில் தொடரும் நிலவேம்பு கசாயம் வினியோகம்.. விழிப்புணர்வு பிரச்சாரம்…களத்தில் தவ்ஹீத் ஜமாத்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 18-10-17 அன்று கீழக்கரை நகர் முழுவதும் 52 வீடுகளுக்கு நேரடியாக டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்து இஸ்லாம் பார்வையில் சுத்தத்தை பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

சந்தித்த வீடுகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நல்ல வரவேற்பு இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த மூன்று நாட்களாக கீழக்கரையில் உள்ள பல பகுதிகளில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.