Home செய்திகள் காலிப் பணியிடங்களை நிரப்ப சத்துணவு ஊழியர் சங்க பொதுக்குழு தீர்மானம்

காலிப் பணியிடங்களை நிரப்ப சத்துணவு ஊழியர் சங்க பொதுக்குழு தீர்மானம்

by mohan

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. மாநில தலைவர் ஏ.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர் கணேசன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி துவக்கவுரை ஆற்றினார். மாநில பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான் சங்க வேலை அறிக்கை சமர்ப்பித்தார். நூர்ஜஹான் கூறுகையில், சத்துணவு மையங்களில் பல்லாயிரக்கணக்கான காலி பணியிடங்களை துரிதமாக நிரப்ப வேண்டும். முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும். காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதிய ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பிற துறை பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் ஆண் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க உரிய அரசாணை வெளியிட வேண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கு 12 நாள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். அரசு ஆணையின்படி 10 ஆண்டு பணி மூப்படைந்த சத்துணவு அமைப்பாளர்களுக் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார்.மாநில பொருளாளர் பெ.சுப்புக்காளை வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.மாநில துணைத்தலைவர்கள் ப.மூர்த்தி, ஆ.மிக்கேல் அம்மாள், வி.குப்புச்சாமி, எஸ்.கனகவேல், மாநில செயலாளர்கள் சி.பிச்சுமணி, ஆ.கிருபாவதி, த.ஜெயந்தி, க.ரவி, கு.குணா, ப.சங்கரி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாநில பொதுச்செயலாளர் இ.மாயமலை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அமைப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வாசுகி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநில தணிக்கையாளர் கே.சோமசுந்தரம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் மு.செல்வக்குமார் நிறைவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ப.அபாராஜிதன் நன்றி கூறினார். இம்மாநில பொதுக்குழு கூட்டத்தில் 450க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com