Home செய்திகள் தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள புதிய கட்செவி (வாட்ஸப்) சேனல் துவக்கம்..

தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள புதிய கட்செவி (வாட்ஸப்) சேனல் துவக்கம்..

by Abubakker Sithik

தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள புதிய கட்செவி (வாட்ஸப்) சேனல் துவக்கம்..

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.

பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பயனடையத் துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் Facebook, Instagram, Twitter மற்றும் Youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (Whatsapp) சேனல் “TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ளலாம். வாட்ஸப் சேனலில் இணைந்து கொள்ள கீழ்க்கண்ட துலங்கல் குறியீடு (QR Code) ஸ்கேன் செய்யவும்.

மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மேற்கண்ட சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

வெளியீடு: இயக்குநர், செய்திமக்கள் தொடர்புத்துறை, சென்னை – 6

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com