கீழக்கரையில் கூடுதலாக ஒரு அரசியல் அமைப்பு தொடக்கம்..

தமிழக மக்கள் நல சங்கத்தின் கீழக்கரை கிளை இன்று தொடங்கப்பட்டது. இதற்கான கூட்டம் இன்று (24-02-2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த சங்கம் வரும் மார்ச் மாதம் முதல் அரசியல் கட்சியாக செயல்படும் என்று அறியப்படுகிறது. இச்சங்கத்தின் கீழக்கரை கிளை தலைவராக செல்வம், செயலாளராக பெருமாள், பொருளாளராக தங்கராஜ், துணை தலைவராக சசிகுமார், நகர் துணை தலைவராக ஹாஜா முகைதீன், துணை செயலாளராக பிரவீன்குமார் மற்றும் நகர் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் நகர் மகளிர் அணி நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

இச்சங்கத்தின் தலைவர் கூறுகையில், இச்சங்கம் மக்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற விசயங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தும். விவசாத்திற்கு அவசியமான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.