நெல்லிக்குப்பம் த.மு.மு.க மருத்துவ அணி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி…

கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மருத்துவ சேவை அணி சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையத்தில் 25.10.18 இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் அதிகமான பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது த.மு.மு.க மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு நெல்லிக்குப்பத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்.

#Paid Promotion