Home செய்திகள் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.

தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.

by mohan

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தாமிரபரணி வடிநில கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரிகுளம், நல்லூர் கீழகுளம், சீனிமாவடிகுளம் ஆகிய கண்மாய்கள்  முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தாமிரபரணி வடிநில கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரிகுளம், நல்லூர் கீழகுளம், சீனிமாவடிகுளம் ஆகிய கண்மாய்கள் மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, (22.7.19)துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில்  முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள37 கண்மாய்கள் ரூ.13.15 கோடி மதிப்பிட்டில் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இத்திட்டத்தின்கீழ் ஆயக்கட்டு விவசாயிகள் பயண்பெறும் வகையில் கண்மாய்களை சீரமைப்பு செய்தல்,மதகுகளை பழுதுபார்தல், மிகை நீர்வழித்தோடிகளை பழுதுபார்த்தல், வரத்துக் கால்வாய், மிகைநீர் வழித்தோடி கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.கண்மாய் புனரமைப்பு பணிகள் அந்தந்த பகுதி ஆயக்கட்டு விவசாய சங்கங்களின் பங்களிப்பு 10சதவிதத்துடன், அச்சங்கங்கள் மூலமே பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.      ஆறுமுகநேரிகுளம் கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மூலமாக ரூ.28.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளது.  இதன் மூலம் 74.55 ஹெக்டேர் ஆயக்கட்டு விவசாய நிலங்கள் பயன்பெறும்.நல்லூர் கீழகுளம் கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மூலமாக ரூ.29.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 201.74 ஹெக்டேர் ஆயக்கட்டு விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், சீனிமாவடிகுளம்; கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மூலமாக ரூ.29.00 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 516.87 ஹெக்டேர் ஆயக்கட்டு விவசாய நிலங்கள் பயன்பெறும்.

கண்மாய்களின் மடை பழுதுபார்த்தல், மடை மறுகட்டுமானம், கரைப்பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பெருநிறுவனங்களில் சமுக பொறுப்பு நிதியின் மூலமும் சிறு கண்மாய்கள் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்படுகிறது. இப்பணிகள் மழை காலத்திற்கு முன்னதாகவே இரண்டு மாத காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, தாமிரபரணி வடிநில கோட்ட பொது பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை,திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, இளநிலை பொறியாளர் ரகுநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இசக்கியப்பன், சுடலை, ஆறுமுகநேரிகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பாலவிநாயகம், நல்லூர் கீழகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பாஸ்கரன்,சீனிமாவடிகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைப்பாண்டியன், செயலாளர் சுந்தர்,பொருளாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!