Home செய்திகள் திருவண்ணாமலை மாவட்டம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா..

திருவண்ணாமலை மாவட்டம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா..

by Askar

திருவண்ணாமலை மாவட்டம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா..

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சீ.கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது
பள்ளி மேலாண்மை குழு தலைவர் பா.சுலோச்சனா , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பெரியதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளியின் உதவி ஆசிரியர் வெள்ளையன் , முனுசாமி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் இந்நிகழ்வில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த முதல் திருப்புதல் தேர்வு மதிப்பெண் பகுப்பாய்வு மூலம் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகளுக்கான ஆக்கவுரையும் ஊக்கவுரையும் நிகழ்த்தினார்
பின்னர் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் மேலும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சியை திறந்து வைக்க மேலப்புஞ்சை அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் பங்கேற்று கண்காட்சியை பார்வையிட்டும் மாணவர்களுக்கு ஆலோசனைகளயும் வழங்கி சிறப்புரையாற்றினார்
மாணவர்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன.
தேசிய பெண் குழந்தைகள் தினம்
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை
பெண்ணிற் சிறந்த பிறப்பில்லை. என்பதற்கேற்ப பெண் கல்வியின் சிறப்பையும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கிருபானந்தம் சிறப்புரையாற்றினார்
தேசிய கல்வி தினம்
கல்வியை நம்பினோர் கைவிடப்படார்.
கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற வரிகளுக்கேற்ப வள்ளுவரின் வழிநின்று கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் அலுவலக பணியாளர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com