Home செய்திகள் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு பேரிடர் கால நிவாரண உதவி..

பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு பேரிடர் கால நிவாரண உதவி..

by Askar

பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு பேரிடர் கால நிவாரண உதவி..

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் 200 ஜவ்வாது மலை வாழ் மாணவர்களுக்கு மற்றும் பெற்றோரை இழந்த சாரணிய பயனாளிகளுக்கு கொரோனா பேரிடர் கால நிவாரண உதவி வழங்கும் முகாம்!

செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் கிராமமான தும்பக்காடு உள்ளிட்ட இடங்களில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணி மற்றும் நிவாரண உதவிகள் வழங்க பாரத சாரண சாரணிய அமைப்பினர் முகாமிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வம் ஆலோசனையின்படி மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர்களான போளூர் கலைவாணி,திருவண்ணாமலை ராஜேந்திரன்,செங்கம் விஜயகுமார் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட செயலர் தலைமையில் திருவண்ணமலை பியூலாகரோலின், போளூர் மாவட்ட செயலர் தட்சணாமூர்த்தி , செங்கம் மாவட்ட செயலர் வெங்கடேஷ் குழுக்கள் மாவட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டு ஆய்வு செய்து நோய்த்தொற்று பரவல் குறித்தும் பொதுமக்களின் வறுமை நிலை குறித்தும் அறிக்கையைப் பெற்றன. அதன் தொடர்ச்சியாக சேவைப் முகாம்பணியில் ஈடுபட்டனர்.

200 பயனாளிகள் என அடையாளம் காணப்பட்ட பொதுமக்கள் மாணவர்கள் முதியோர்கள் பெற்றோரை இழந்த சாரணியர்கள் இவர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக ஜவ்வாது மலை தும்ப காட்டில் முகாமிட்டு நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு மளிகை பொருட்கள்தொகுப்பு காய்கறி தொகுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் என்ற ஓமியோ மருந்து, கபசுரக்குடிநீர், ஊட்டச்சத்து உணவு பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் சோப்புகள் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பலர் நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

முகாம் ஏற்பாட்டுகுழுவில் மாவட்ட பயிற்சி ஆணையர்கள் ஜமுனாராணி கலைவாணி மாவட்ட அமைப்பு ஆணையர்கள் அமிர்தா அருண்குமார் சாரண சாரணிய ஆசிரியர்கள் சகிலா கவியரசு செந்தில்குமார், சூரியபகவான், அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!