Home செய்திகள் கொரோனா வைரசே ஓடிப்போ, இறைவனே எங்களை பாதுகாத்திடு என்று நூதன வழிபாடு நடத்திய கிராம பெண்கள்..!

கொரோனா வைரசே ஓடிப்போ, இறைவனே எங்களை பாதுகாத்திடு என்று நூதன வழிபாடு நடத்திய கிராம பெண்கள்..!

by Askar

கொரோனா வைரசே ஓடிப்போ, இறைவனே எங்களை பாதுகாத்திடு என்று நூதன வழிபாடு நடத்திய கிராம பெண்கள்..!

செங்கம் அருகே கொரோனா வைரஸ் ஒழிய பெண்கள் கும்மியடித்து நூதன வழிபாடு நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசப்பாக்கம் பகுதியில் கொரோனா வைரஸ் ஒழிய பெண்கள் கும்மியடித்து நூதன வழிபாடு நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக மட்டுமே இருந்தது.

அதன் பிறகு சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். அதுவரை கட்டுக்குள் இருந்த கொனோரா வைரஸ் தொற்று மாவட்டத்தில் தீவிரமானது.

தற்போது திருவண்ணா மலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வராய நல்லூர் கிராமத்தில் பெண்கள் முக கவசத்துடன் தெருவில் ஒன்று திரண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து வைரஸ் ஒழிய வேண்டி கும்மியடித்து பாட்டு பாடினர்.

அப்போது கொரோனா வைரசே ஓடிப்போ, இறைவனே எங்களை பாதுகாத்திடு என்று நூதன வழிபாடு நடத்தினர்

செய்தியாளர், செங்கம் சரவணக்குமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!