Home செய்திகள் திருப்பரங்குன்றம் பெரியார் நகர் ஊராட்சியில் பெண் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு;சுற்றுச்சூழலை மேம்படுத்த மஞ்ச பை, மரக்கன்று வழங்கி மாணவர்களிடம் விழிப்புணர்வு..

திருப்பரங்குன்றம் பெரியார் நகர் ஊராட்சியில் பெண் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு;சுற்றுச்சூழலை மேம்படுத்த மஞ்ச பை, மரக்கன்று வழங்கி மாணவர்களிடம் விழிப்புணர்வு..

by Askar

திருப்பரங்குன்றம் பெரியார் நகர் ஊராட்சியில் பெண் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு; சுற்றுச்சூழலை மேம்படுத்த மஞ்ச பை, மரக்கன்று வழங்கி மாணவர்களிடம் விழிப்புணர்வு..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் பெரியார் நகர் ஊராட்சியில் உள்ள அரசு நடு நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்வாண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெயா தொகுப்புரை வழங்கினார்.பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி மாணவர்களுக்கு கல்வி குறித்தும் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் சுற்றுச்சூழல் மேம்பட பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க் வேண்டும் என பேசினார். பள்ளி ஆசிரியைகள் நித்யா, விஜயசாந்தி வரவேற்புரை கூறினார்.

பெரியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் வருகை, மதிப்பெண், பல்வேறு சாதனை புரிந்த சிறந்த மாணவ மாணவிகளுக்கு கிராமத்தைச் சேர்ந்த லூர்து மேரி பள்ளி மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பரிசளித்தார்.

.இதில் பெரியார் நகர் கிராமத்தை சேர்ந்த லூர்து மேரி என்பவர் பள்ளிக்கான வளர்ச்சிப் பணிகளுக்கு நிறைய நன்கொடை செய்துள்ளார் .இன்று நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி மாணவர்களிடம் கூறும்போது.

நாங்கள் படிப்பறிவு அற்றவர்கள் எங்களது களத்தில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் பெண்களுக்கு படிப்பு தேவை இல்லை என வீட்டில் வைத்தனர்.

ஆனால் இன்று காலங்கள் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது பெண்கள் டாக்டராக மற்றும் அரசு பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர்.

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்று வைக்கிறேன் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது.

அவற்றை தவிர்க்க பிளாஸ்டிக் பொருட்களை வாங்க வேண்டாம் மஞ்சள் பையை உபயோகிக்க வேண்டும் மேலும் பசுமை சூழ்நிலை உருவாகஒவ்வொரு மாணவ மாணவியரும் தங்கள் வீட்டில் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி வளருங்கள் சுற்றுச்சூழல் மேம்பட உதவும் .

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகபடுத்தி பல்வேறு நோய்கள் உண்டாகிறது.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதனால் நோய் வருவதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

நமது காலத்தில் நோய் என்பதே கிடையாது இன்று எல்லா விஷயத்திலும் நோய் என்பது தான் அதிகமாக காணப்படுகிறது.

ஆகவே இங்குள்ள பெற்றோர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, மரங்களை நட்டு பசுமை சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் கிராமத்து சமூக ஆர்வலர் லூர்து மேரி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!