Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு.

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் ஆனைய்குடி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு நடைபெற்றது, இதில் திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எம்.கே.அமர்லால் தெரிவித்ததாவது, விவாசாயிகளிடம் பருத்தியில் தாக்கும் வாடல்நோய்களின் பாதிக்கப்பட்ட இளஞ்செடியின் விதையிலைகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படும் என்றும்நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும் என்றும் வளர்ந்த செடியில் நோய் தொற்றினால் அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளாக மாறி பின் வாடி உதிர்ந்து விடும் என்றும் தண்டின் அடிப்பகுதி கருமையாகவும், உரித்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் காணப்படும் என்றும் தெரிவித்தனர் . மேலும் வாடல்நோய் அறிகுறிகளை நேரடியாக கண்டு அதற்கான தீர்வாகஅமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளை, கார்பாக்சின் அல்லது கார்பென்டசிம் 4 கிராம் / கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும் ஜீன் – ஜீலையில், கோடை உழவுக்குப் பின் அறுவடை செய்த தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும்.பொட்டாசியம் உரத்தின் அளவை அதிகரிக்கவும். அதிகப்படியான தொழுவுரம் 100 டன் / எக்டர் இடவும்.0.05 % பெனோமைல் (அ) 0.1 % கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும் என்று விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படுவதால் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் செலவு குறைகிறது என்று தெரிவித்தனர். பின்னர் இராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேரசிரியர் முனைவர் பாலாஜி தெரிவிக்கையில் : பருத்தியில் தாக்கும் ஆல்டர்நேரியா இலைக்கருகல் நோய் எல்லா பருவத்திலும் பாதிக்கக்கூடியது. ஆனால் 45-60-ம் நாளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிர்ப்பழுப்பு நிறத்தில் வட்ட வடிவத்தையோ ஒழுங்கற்ற வடிவத்தையோ கொண்ட சிறு சிறு புள்ளிகள் காணப்படும்.ஒவ்வொரு புள்ளியின் நடுவிலும் அழுக்காக வளையங்கள் காணப்படும். புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து இலை முழுவதும் பாதிக்கின்றன என்றார். மேலும் பாதிக்கப்பட்ட இலைகள் நொறுங்கி உதிர்ந்துவிடும் என்றும் சிலநேரங்களில், தண்டுகளிலும் நோயின் அறிகுறி காணப்படும் என்றும்தீவிர நிலையில், புள்ளிகள் பூவடிச்செதில்களிலும் காய்களிலும் காணப்படும் என்றும் பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும் என்று விவரித்தார். அதனை தொடர்ந்து ஆரம்ப நிலையில், மான்கோசெப் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ / எக்டர் தெளிக்கவும்.15 நாட்கள் இடைவெளியில் 2 – 3 முறை தெளிக்கவும்.என விளக்கம் அளித்தார் இக்கூட்டாய்வுக்கான ஏற்பாடுகளை ம. ப முருகேசன் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் ச. ஜோசப் ஆகியோா் செய்தனா்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!