Home செய்திகள்உலக செய்திகள் தேர்தலுக்காக எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை பாடி வருகிறார் மோடி; திருநாவுக்கரசு எம்.பி.பேட்டி..

தேர்தலுக்காக எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை பாடி வருகிறார் மோடி; திருநாவுக்கரசு எம்.பி.பேட்டி..

by Abubakker Sithik

எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை தேர்தலுக்காக பாடி வருகிறார் மோடி. ஓட்டுக்காக அவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவில் கூட்டணியில் இல்லை என்பதால் அவர்கள் இரண்டு பேரின் புகழைப்பாடி வாக்குகளை சேகரிக்க பார்க்கிறார் என திருநாவுக்கரசு எம்.பி. கூறியுள்ளார்.

இது குறித்த திருநாவுக்கரசு எம்.பி அளித்த பேட்டியில், தற்போது பொது மேலாளர் தலைமையில் ரயில்வே ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். இதன் மூலம் எம்பிக்கள் தங்களது தொகுதி சம்பந்தமான ரயில்வே கோரிக்கைகளை முன்வைக்க முடிகிறது. இது போன்ற கூட்டங்களில் ரயில்வே போர்டு சார்ந்த அதிகாரிகள் யாராவது இருந்தால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படும். பொது மேலாளர் தலைமையில் கூட்டம் நடைபெறும் போது ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எம்பிக்கள் பெரும்பாலான கோரிக்கைகளை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அவைகள் போர்டில் இருக்கிறது, போர்டில் இருக்கிறது என்று கூறி காலதாமதம் செய்கிறார்கள்.

எனவே ரயில்வே போர்டு அதிகாரிகள் யாராவது இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்றால் உடனடியாக தீர்வு காண வசதி ஏற்படுத்தப்படும். ஏற்கனவே மீட்டர் கேஜ் ஆக இந்த ரயில் பாதைகள் பிராட்கேஜாக ரூ. ஆயிரம் கோடி செலவில் மாற்றப் பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருப்புறப்பூண்டி, மாயவரம், சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ,ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ரயில்கள் வாரத்திற்கு இரண்டு, மூன்று தினங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. ஆறு மாவட்ட மக்களுக்கு பயன்படுத்தும் இந்த ரயில்கள் தினமும் இயக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். எனவே தினமும் ராமேஸ்வரத்திலிருந்து தினமும் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, மாயவரம் வழியாக சென்னை வரை ஒரு ரயில் இயக்க ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.

தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு நிதி ஒதுக்கியதாக பிரதமர் கூறி வருகிறார். ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததைவிட பல மடங்கு குறைவாக தான் நிதி கொடுத்திருக்கிறார்கள். எனவே மோடி பொத்தம் பொதுவாக கூறிவரும் கருத்து தவறானது. எந்தெந்த ஆண்டு எந்தெந்த திட்டங்களுக்காக எத்தனை கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரத்தோடு கூறினால் சரியானதாக இருக்கும். பேச்சாளர் பேசுவது போல் பொத்தம் பொதுவாக கூறுவது ஏற்புடையதல்ல. ஆட்சி முடியும் நேரத்தில் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறார்கள்.

மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்வதை பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால் அதன் அருகிலேயே இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல் எடுத்து கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். எய்ம்ஸ் கல்லூரி ராமநாதபுரத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி மதுரை வந்த போது எய்ம்ஸ்கான கட்டிடத்தை திறந்து வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து படகுகளையும் சிறை பிடிக்கிறது. இதுவரை 150 க்கு மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அரசு இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது. பாரதிய ஜனதா ஆட்சியில் இலங்கை மீனவர்களையும் படகுகளையும் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூத்துக்குடியில் மீனவர் பகுதியில் பேசும் மோடி மீனவர்களுக்காக எந்த வித வாக்குறுதியையும் கொடுக்கவில்லை.

கடந்த 10 வருடங்களாக எம்ஜிஆர் ஜெயலலிதாவை ஞாபகம் வரவில்லை. இப்போது தான் ஞாபகம் வந்திருக்கிறது. ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் நூறு நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைகள் இருந்தார். அப்போது ஒரு நாள் கூட வந்து பிரதமர் மோடி அவரை சந்திக்கவில்லை. ஆனால் ராகுல்காந்தி ஜெயலலிதாவை சந்திக்க வந்தார். ஆனால் இப்போது எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை தேர்தலுக்காக பாடி வருகிறார். இதில் எந்த ரகசியமும் இல்லை. ஓட்டுக்காக அவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவில் கூட்டணியில் இல்லை என்பதால் அவர்கள் இரண்டு பேரின் புகழைப்பாடி வாக்குகளை சேகரிக்க பார்க்கிறார் இதனை எதார்த்தமான புகழ்ச்சியாக பார்க்க முடியாது கூட்டணிக்கான தொகுதி பங்கீடு எந்த வித பிரச்சனையும் இன்றி சுமூகமாக முடிவு செய்யப்படும்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!