Home செய்திகள் நாளை சூரசம்ஹாரம் -திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரம்.!

நாளை சூரசம்ஹாரம் -திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரம்.!

by Askar

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

சஷ்டி விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கடற்கரையில் நடைபெறுகிறது.

லட்ச்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என கருதி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடற்கரை மணல் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சமப்படுத்தப்பட்டு வருகிறது.

சுரசம்ஹாரா நிகழ்வை காண்பதற்கு 7 இடங்களில் அகன்ற எல்.இ.டி., டிவிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடற்கரை, கோவில் வளாகம் மற்றும் நகரின் பிரதான வீதிகளில் 45 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி, விருதுநகர், திண்டுக்கல் உட்பட ஆறு மாவட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!