தேவர் குரு பூஜையை ஒட்டி திருவிளக்கு பூஜை..

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் தேவர் குரு பூஜையை முன்னிட்டு கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் திருவிளக்கு பூஜை நடந்தது.

இந்நிகழ்விற்கு முதல்வர் வே.அருணாச்சலம் முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் மாவட்ட விவேகானந்தா கேந்திரா பொறுப்பாளர் ரெ.சகுந்தலா தலைமை வகித்தார். இதில் மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து துறை பேராசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் போ.பால்பாண்டியன், தங்கமுத்து, சிவராமகிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

#Paid Promotion