Home செய்திகள் இறந்து ஏழு மாதம் ஆனவருக்கு கொரானா பரிசோதனை;தென்காசி மாவட்டத்தில் பரபரப்பு!

இறந்து ஏழு மாதம் ஆனவருக்கு கொரானா பரிசோதனை;தென்காசி மாவட்டத்தில் பரபரப்பு!

by Askar

இறந்து ஏழு மாதம் ஆனவருக்கு கொரோனா பரிசோதனை;தென்காசி மாவட்டத்தில் பரபரப்பு..

தென்காசி மாவட்டத்தில் இறந்து ஏழுமாதம் ஆனவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், சென்னையில் வசிக்கும் பெண்ணுக்கு, தென்காசியில் கொரானா பரிசோதனை செய்ததாக பாசிட்டிவ் ரிப்போர்டும் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் நகரை சேர்ந்தவர்  வினோத். கடந்த ஆறு வருடங்களாக சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் . இவருடைய தந்தை ஓய்வு பெற்ற அந்தோணிராஜ் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஆவார். அந்தோணிராஜ் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இருதய நோய் காரணமாக நெல்லையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்தார். அவரது சிகிச்சையின் போது திருநெல்வேலியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த18ம் தேதி வினோத்தின் தந்தை மறைந்த அந்தோணிராஜுக்கும், வினோத்தின் மனைவிக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் மெசேஜ் வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் 19ஆம் தேதியன்று தென்காசி கொரோனா கட்டுப்பாடு அறையிலிருந்து வினோத்தை அழைத்து, வினோத்தின் மனைவிக்கு கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளதாகவும், உடனடியாக அட்மிட் ஆக வேண்டுமென்றும் கூறியதைக் கேட்டு வினோத் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவரிடம் பேசியவரிடம் தான் சென்னையில் இருப்பதாகவும். தென்காசியில் எந்த கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ‌‌ஆகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்தவருக்கு கொரோனா பரிசோதனை மேற்க் கொண்டு வந்ததாக வந்த சான்றளிக்கப்பட்டடது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
    

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!