Home செய்திகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெரியகுளம் கிளை மற்றும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சார்பாக 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது…!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெரியகுளம் கிளை மற்றும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சார்பாக 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது…!

by Askar

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெரியகுளம் கிளை மற்றும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சார்பாக 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது…!

தேனி மாவட்டம், பெரியகுளம், சோத்துப் பாறை அணை அருகே பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி முன்பாக சோத்துப் பாறை அணைப்பகுதி, சின்னூர் காலனி, சின்னியம்பாளையம், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கும், சோத்துப் பாறையில் உள்ள பெரியகுளம்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும், மாணவ, மாணவியரின் குடும்பத்தினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெரியகுளம் கிளையின் சார்பாக ஆயிரம் மதிக்கத்தக்கமளிகைப் பொருட்களும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர்கள் சார்பாக 100-ரூபாய் மதிப்புள்ள காய்கறித் தொகுப்புகளையும், தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி V. திலகம், மாவட்டத் துணைஆட்சியர் S. பாலச்சந்தர், மதுரை மண்டல ஸ்டேட்வங்கி முதன்மை மேலாளர் ப்ராங்க்ளின், பெரியகுளம் வங்கி முதன்மை மேலாளர் P.V.நாராயணன், தேனிவங்கி கிளை மேலாளர்N. ராஜசேகரன், ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியை M. பாலாமணி, உதவித் தலைமை ஆசிரியர் ஆனந்த கிருஷ்ணன் உட்பட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிவாரணப் பொருட்கள் பெற வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சமூக இடைவெளிக்காக கிருமி நாசினி வட்டம் அமைக்கப்பட்டு வரிசையாக வாங்கிச் சென்றனர்.

 A. சாதிக் பாட்சா நிருபர், தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!