விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீரவணக்க புகழஞ்சலி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கல்வித் தந்தை காமராஜர்  பிறந்த நாள், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்  தந்தை தொல்காப்பியர்  நினைவு தினத்தினை முன்னிட்டு தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் பெரியகுளம் அம்பேத்கர் அவர்களது முழு உருவ வெங்கல சிலை அருகே வைக்கப்பட்டிருந்த காமராஜர், மற்றும் தொல்காப்பியர் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் மற்றும் தொல்காப்பியர் அவர்களுக்கு வீரவணக்கம் மற்றும் புகழஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்விற்குபெரியகுளம் நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமை தாங்கினார்.தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் முன்னிலை வகித்தார், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன், ரபீக், தமிழன்,செல்வராசு,ஆண்டி, ஜாபர் சேட், சையது அபுதாஹிர், எம்.சி. மனோகரன், கருப்பையா, மணிபாரதி, கோமதி ஆனந்தராஜ் பாடகி இளமதி உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.மேலும் தொல்காப்பியர் நினைவு தினத்தினை முன்னிட்டு பெரியகுளம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் மாவட்ட பொருளாளர் ஜெ. ரபீக், ஜாபர் சேட், சையது இப்ராஹிம் தலைமையில் 50 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்திடவும், தேவதானப்பட்டியில் தமிழன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..