பெரியகுளம் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் விபத்தில் பலி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழிச்சாலையில் உள்ள அடுக்கத்திற்கு நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஒரே இருசக்கர வாகனத்தில் அய்யனார் , பிரபு மற்றும் பிச்சைப்பாண்டி ஆகிய மூவரும் செல்லும் போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் கடைசியாக உட்காந்திருந்த பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைப்பாண்டி வயது 20 என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இத்தகவலறிந்த பெரியகுளம் காவல் துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த பிச்சைப் பாண்டியன் உடலை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது சம்பந்தமாக பெரியகுளம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

 சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்