Home செய்திகள் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் தீர்ப்பு.ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

மறைந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் முதல் வருமான கலைஞர் கருணாநிதி யின் ஆட்சிக்காலத்தில் 2009 ஆம் ஆண்டு பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது.ஆனால் 2008 நவம்பர் 27ம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, அருந்ததியர் (தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 2009 ஏப்ரல் 29ல் விதிகள் உருவாக்கப்பட்டன.அந்த நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009 ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சேலத்தைச் சேர்ந்த யசோதா 2015 ல் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கு நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் விசாரணைக்கு வந்தபோது மாநில அரசுகள் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் நிலையைத் தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியதை, தொடர்ந்து உள் ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைக் கொண்டாடும் வகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி அன்னை சத்யா நகரில் உள்ள அருந்ததிய மக்களுக்கு ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!