ஆண்டிபட்டி ரயில்வே பாலத்தில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தை சரி செய்த எம்எல்ஏ.வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி.

மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் பல கோடி மதிப்பீட்டில் கணவாய் பகுதியில் மலையை குடைதல், 50 க்கும் மேற்பட்ட பாலங்கள், தடுப்புச் சுவர்கள் என சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 6 ஆண்டுகளுக் கும் மேலாக வேலைகள் நடைபெற்று வருகிறது.மேலும் ரயில் சென்று வரும் நேரங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலை எண்ணி, மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் நலன் கருதி ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர் பகுதியில் வேலப்பர் கோவில் செல்லும் சாலையில் ரயில்வேதுறையின ரால் அமைக்கப்பட்ட பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கி குளம் போன்று காணப்பட்டது.

இதனால் அப்பகுதி கிராம மக்கள் வேலைகளை முடித்து டூவீலரில் வீட்டிற்கு திரும்பி வரும்போது மழை நீரையை கடந்து செல்ல முடியாமல் இரவு நேரத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் வேறு வழியாக சென்றனர்.இதில் சில இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் வரும்பொழுதே பழு தானதால் டூவீலரை சிரமத்துடன் தள்ளிச் சென்றனர். தகவலறிந்த ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் நேற்று காலை மழை நீர் தேங்கிய ரயில்வே பாலத்திற்கு சென்று பார்த்தபோது போக்குவரத்து தடை பட்டிருந்தது.இது சம்பந்தமாக உரிய அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பயன் இல்லாததால் அவரே, தனியார் வாகனத்தின் மூலமாக மழைநீரை உறிஞ்சி எடுத்து போக்குவரத்தை சரி செய்தார். மழைநீரால் நீண்டநேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள், எம்எல்ஏ செய்த செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில்,பொதுமக்கள் தங்குதடையின்றி சென்று வருவதற்காக ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கணவாயிலி ருந்து குன்னூர் வரை அமைக்கப் பட்டுள்ள அனைத்து பாலங்களி லும் மழைநீர் தேங்கி குளம் போன்று காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 400 கிராம மக்கள், விவசாய நிலங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் மருத்துவத்திற்கும் வந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்