Home செய்திகள் பத்து சவரன் தங்க நகைகளை திருடிய பெண் கைது…

பத்து சவரன் தங்க நகைகளை திருடிய பெண் கைது…

by ஆசிரியர்


மதுரை மாநகர் கதவு எண்-13/B, தண்டல்காரன்பட்டி 2வது குறுக்கு தெரு, பழங்காநத்தம் என்ற முகவரியில் வசித்து வரும் கடற்கரை தங்கம் என்பவருடைய மகன் ஐய்யம்பெருமாள் என்பவர் தனது வீட்டில் இருந்து 10 சவரன் தங்க நகைகள் திருடுபோய்விட்டதாக C2 -சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

பின்னர் , புலன் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது இவ்வழக்கின் வாதி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ஜெரினாபேகம் 23/19, க/பெ. அப்பாஸ் என்பவர்தான் என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தது. எனவே அவரை இன்று கைது செய்து அவரிடமிருந்து பத்து சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். C2 -சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. தங்ககிருஷ்ணன் அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com