Home செய்திகள் ஒய்வு அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை திருட்டு: போலீஸார் தீவிர விசாரணை…

ஒய்வு அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை திருட்டு: போலீஸார் தீவிர விசாரணை…

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரத்தில் பூட்டிக்கிடந்த ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டு கதவுகளை உடைத்து 51 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருடு போனது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பங்களா தெரு 7 வது வீதியைச் சேர்ந்தவர் தங்கமணி, 67. இவர் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலைய உதவி இயக்குனராக பணியாற்றி கடந்த 2013 ஜன.31 ல் ஓய்வு பெற்றார். இவர் தனது மனைவி ஜெயந்தியுடன் ஜூலை 28 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள மகள் வீட்டுச் சென்றார். இந்நிலையில் வீட்டு வேலைக்கார பெண் நேற்று காலை வீட்டை சுத்தம் செய்ய வந்த போது வீட்டின் முன் புற கதவு, முன் புற, பின் புற இரும்பு கேட்கள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து தங்கமணிக்கு செல்போன் மூலம் வேலைக்கார பெண் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பெங்களூருவில் இருந்து தங்கமணி நேற்றிரவு ராமநாதபுரம் வந்தார். வீட்டில் உடைக்கப்பட்டு கிடந்த படுக்கையில் இருந்த 2 பீரோக்கள் திறக்கப்பட்டு கிடந்தன. அதை பார்த்த போது அதில் வைத்திருந்த  ஐந்தரை பவுன் பிறைவடிவ செயின், 5 பவுன் இரட்டை வட செயின், 4 பவுன் இரட்டை வட செயின், மூன்றரை பவுன் கவர்னர் மாலை, 4 பவுன்  இலை வடிவ  நெச்லஸ், மூன்றரை பவுன் பிரெஸ்லெட், 3 பவுன் விளக்கு மூக்கு செயின், 3 பவுன் வெள்ளை, சிவப்பு கல் பதித்த வலையல் ஜோடி, 3 பவுன் குண்டு வடிவ வலையல் ஜோடி, 3 பவுன் முருக்கு செயின், சிவப்பு கல் பதித்த மாங்காய் வடிவ 3 பவுன் நெக்லஸ், வெள்ளை, சிவப்பு கல் பதித்த  இரண்டரை பவுன் ஜோடி தோடு,  இரண்டரை பவுன் வைக்கபூரி செயின், ஒன்றரை பவுன் விநாயகர் வடிவ மோதிரம், ஒன்றரை பவுன் தங்க தோடு, 8 கிராம் தங்க காசு, 3 கிராம் தாலி குண்டு என 51 பவுன் தங்க நகை, வெள்ளி தோடு ஜோடி பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. இது குறித்து போலீசில் தங்கமணி புகார் கொடுத்தார். இதன்படி பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரித்து வருகிறார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com