தஞ்சாவூர் விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாஜகவில் இணைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து சம்மந்தப்பட்ட விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :- கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் மைய மாவட்ட மகளிர் அணி செயலாளரான ராசாத்தி , பாஜக பிரமுகர் ஒருவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது அதனைத் தொடர்ந்து விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தியிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது, நான் எனது நண்பர் ஒருவரது வீட்டிற்கு அவரது குடும்ப பிரச்சினை குறித்து பேசுவதற்காக சென்றிருந்தேன். அப்போது அவருடைய நண்பரான பாஜக பிரமுகர் ஒருவரும் அந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அந்த குடும்ப பிரச்சினை குறித்து பேசி முடித்ததும் வந்திருந்த பாஜக பிரமுகர் எனக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிப்பதாக கூறி அணிவித்தார். அவர் அணிவித்த பின்னர் கவனித்தபோது அதில் பாஜக சின்னம் இருப்பதை கண்டவுடன் நான் அந்த சால்வனை அவரிடம் திரும்ப கொடுத்து விட்டு நான் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பில் இருக்கக் கூடியவர் எனக்கு உங்கள் கட்சியின் சின்னம் கொண்ட சால்வை அணிவித்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறினேன். அவரும் எனக்கு தெரியாது நீங்கள் விசிகவை சேர்ந்தவர் என்று கூறி வருத்தம் தெரிவித்து சென்று விட்டார் பின்னர் எனக்கு பாஜக பிரமுகர் சால்வை அணிவித்த புகைப்படத்தோடு நான் பாஜகவில் இணைந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் வெளியானது. அந்த செய்தி வெளியிடப்பட்ட போது நான் எனது கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆணையின்படி கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தேன் . பின்னர் அந்த செய்தி குறித்து பாஜக பிரமுகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , தவறாக செய்தி வெளியிடப்பட்டது என்றும் உடனடியாக அந்த பதிவினை அழித்து விடுவதாக கூறி அழித்தும் விட்டார் . இது குறித்து வருத்தம் தெரிவித்து எனக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பி இருந்தார். இந்த ஊடகத்தின் மூலம் எனது சக கட்சி தொண்டர்களுக்கும் , கட்சியின் தலைமைக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்று வரை நான் விசிகவில் மட்டுமே இணைந்து செயலாற்றி வருகின்றேன் இனி என்றென்றும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கொள்கையின்படியும் இறுதி வரை விசிகவில் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் கூறிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
78
You must be logged in to post a comment.